அறிமுகம்

ஜேர்மனிய கூட்டாட்சியின் பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் சார்பாக ஜேர்மனிய அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனம் (GIZ) இலங்கையின் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சுடன் இணைந்து அமுலாக்கும் நிகழ்ச்சித்திட்டமே சமூக ஒத்திசைவு மற்றும் நிலைமாற்றத்திற்கான உள்ளூர் முன்னெடுப்புகள் கருத்திட்டத்தினூடாக ஆகும். கருத்திட்டத்தின் பங்காளர் அமைச்சாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு செயற்படுகிறது. அரச மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் சமூக ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பிரஜைகள் பங்குபற்றலை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி, FLICT இலங்கை அரசாங்கத்துக்கு உதவி வருகிறது.

தேசிய மட்டத்தில்: தேசிய கலந்துரையாடல்கள் பற்றிய அமைச்சு மற்றும் உள்ளூராட்சிகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆகியவற்றுடன் FLICT பணியாற்றுகிறது.

உள்ளூர் மட்டத்தில்: தெரிவு செய்யப்பட்ட சமூதாயஞ்சார் நிறுவனங்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ளும் அதே நேரம் மாகாண சபை, மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகள் ஆகியவற்றின் உத்தியோகத்தர்களுடன் ஒருங்கிணைந்து அம்பாறை, பதுளை, காலி, முல்லைத்தீவு மற்றும் புத்தளம் ஆகிய ஐந்து முன்னோடி மாவட்டங்களில் FLICT தனது பணிகளை மேற்கொள்கிறது.

2014 ஜனவரியில், புதியதும் இறுதியானதுமான கட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் 2017 மார்ச்சில் அது முடிவுறும். இந்த கட்டத்தின் நோக்கம்: 'முக்கிய அரச மற்றும் அரசு சாரா துறையினர் இணைந்து சமூக ஒருமைப்பாட்டின் முக்கிய கூறுகளை வெற்றிகரமாக பிரயோகிப்பதாகும்.' இதனூடாக எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்:

  • சமூக ஒருமைப்பாட்டு அறிவை அதிகரித்தல்.
  • முக்கிய அரச மற்றும் அரசு சாரா துறையினரின் கொள்திறனை விருத்தி செய்தல்.
  • உள்ளூர் தேவைகளை அடிப்படையாக கொண்டு சமூக ஒருமைப்பாட்டுக்கு பங்களித்த முன்னெடுப்புகள் மீள செயற்படுத்த திடமாக்குதல்.

இந்த பெறுபேறுகளை அடைய, நான்கு பணித் துறைகளில் FLICT தன்னை ஒழுங்கமைத்துள்ளது, அவையாவன:

  • தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் சமூக ஒருமைப்பாட்டு தேசிய கொள்கைச் சட்டத்தை அமுலாக்குதல்.
  • உள்ளூர் மற்றும் சமூக மட்டத்தில் சமூக ஒருமைப்பாட்டு தேசிய கொள்கைச் சட்டகத்தை அமுலாக்குதல்.
  • கலை மற்றும் கலாசாரத்தினூடாக சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்தல்.
  • கொள்திறன் விருத்தி, கற்றல் மற்றும் புத்தாக்கம்.

அறிமுகம்

முன்னதாக அமுல்படுத்தப்பட்ட நீதி நியாயத்தை சமமாக அணுகுதல்' கருத்திட்டத்தில் 1ஆம் மற்றும் 2ஆம் கட்டங்கள் மூலம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை அடிப்படையாக சட்டத்தினை பலப்படுத்தல், நீதி நியாயத்துக்கான அணுகுவழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்தல் கருத்திட்டம் உருவாக்கப்பட்டது. குறிப்பாக சட்ட உதவி, சிறைச்சாலை நிருவாகம் மற்றும் ஆவண அணுகுதல் ஆகிய சேவை வழங்குதல் முறைமையை மேம்படுத்தும் நோக்குடன், அதற்கு இயைபான பிரதேச மட்ட பணிகள் மற்றும் பொறிமுறைகளுக்கு வசதியளித்தல் நீதி நியாயத்துக்கான சமமான அணுகுதல் கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்ச்சித்திட்டத்தினூடாக நீதி நியாயத்துக்கான நிறுவனங்களுக்கிடையில் அதிக ஒருங்கிணைப்பு அணுகுமுறையுடன் முறைசாரா பொறிமுறையை தாபித்துள்ளது.

இந்த நேர்கணிய பெறுபேறுகளை தளமாக கொண்டு, அதிக பலமிக்க நீதி நியாயத்திற்கான மறுசீரமைப்புக்காக காரணியாகும் வகையில், இந்த ஒருங்கிணைப்பு கூறுகளின் சிலவற்றை பொறிமுறையாக்கி அதனை மேம்படுத்தி சட்டத்தை வலுப்படுத்தல், நீதி நியாயத்துக்கான அணுகு வழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்தல் கருத்திட்டம் (SELAJSI) கட்டியெழுப்பும். குறித்த துறைகளில் காணப்படும் நிறுவன திட்டமிடல் இயலளவை வலுப்படுத்துவதனூடக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டிற்கான தேசிய கொள்கைச் சட்டகம் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரச கொள்திறனுக்கு உதவுவதற்கு இந் நிகழ்ச்சித்திட்டம் முக்கிய அவதானத்தை கொண்டுள்ளது.

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, நீதி அமைச்சு அத்துடன் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் அலுவல்கள் அமைச்சு ஆகியன இந் நிகழ்ச்சித்திட்டத்தை தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்துகின்றன.

சமீபத்திய செய்திகள்

இந்த நாட்டில் பல்வேறு மொழிகளை பேசும் இனங்கள் 19 காணப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு மொழிகள் பேசுகின்றமை ரம்மியமானது. பல்வகைமைதான் எமது சக்தி - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள்

08 ஏப்ரல் 2017

இந்த நாட்டின் எதிர்கால தலைவர்கள் பிள்ளைகளே என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள் குறிப்பிடுகிறார். சில அரசியல்வாதிகள்...

கௌரவ. அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் கொழும்பில் நிகழ்த்திய உரை

08 ஏப்ரல் 2017

இந்நாட்டின் பிள்ளைகளின் கல்வி மட்டத்தை மேம்படுத்துதல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் கடமையாகும். - தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்...

இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழும் அனைவரையும் ஒன்றிணைப்பதுதான் எனது கடமை - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்

09 ஏப்ரல் 2017

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில், அரசகரும மொழிகள் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும் சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும்...