அமைச்சின்  பொறுப்புகளும் பணிகளும்

  • தேசிய கலந்துரையாடல் மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் விடயதானங்கள் ஊடாக தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் விடயத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கொள்கைகள், நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை தயாரித்தல், மீளாய்வு செய்தல் மற்றும் மதிப்பிடல்.
  • தேசிய மொழிக் கொள்கையை அமுல்படுத்தல் மற்றும் அது தொடர்பான செயற்பாடுகள்.
  • சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை மற்றும் சகவாழ்வினை ஏற்படுத்துவதற்கு தேவையான கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்தி அமுல்படுத்துதல்.
  • இனங்களுக்கிடையே அவர்களின் சமூக கலாசார, சமூக, சமய பின்னணியை பரஸ்பரம் அறிந்து கொள்வதற்கு முக்கியமான தேசிய மொழிகள் மற்றும் இணைப்பு மொழிப் பயன்பாட்டிற்கு ஏற்ற வசதியை ஏற்படுத்தல்.
  • அமைச்சின் கீழ் உள்ள முகவர் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள விடயப் பரப்பகளுடன் தொடர்புடைய ஏனைய எல்லா விடயங்களும்.
  • அமைச்சின் பணிப்பாணைக்குள் வரும் நிறுவனங்களை மேற்பார்வை செய்தல்.

தொலைநோக்கு

பல்வகையினால் பலம் பெற்றதும் சகவாழ்வு மீள் நிர்மாணிக்கப்பட்டதும் அனைத்து கலாச்சாரங்களினதும் தனித்துவங்களும் பேணி போற்றப்படுகின்றதுமான இலங்கை தேசம்.

பணிநோக்கு

அனைத்து மக்கள் குழுக்களினதும் உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றதும், ஒருவரை ஒருவர் பரஸ்பரம் மதிக்கின்றதும் சகவாழ்வுடனும் அபிவிருத்தியடைந்ததுமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக கொள்கைகளை உருவாக்குதல், கலந்துரையாடல்களை ஏற்படுத்தல், வழிகாட்டல், வசதியளித்தல் மற்றும் அதற்கு உரித்தான நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல்.

அமைச்சின் குறிக்கோள்கள்

  • அரசியல் இலக்குகளை அடைந்து கொள்ள ஆயுதங்களை கையிலெடுக்காதிருப்போம்.
  • இலங்கையர் எமது அடையாளம், பல இனங்கள் எமது பலம்.
  • ஒரு நாடு, அனைவருக்கும் அதிகாரம்..
  • வரலாற்றை மீளாய்வு செய்து பிழைகளை திருத்திக் கொள்வோம்.

சமீபத்திய செய்திகள்

இந்த நாட்டில் பல்வேறு மொழிகளை பேசும் இனங்கள் 19 காணப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு மொழிகள் பேசுகின்றமை ரம்மியமானது. பல்வகைமைதான் எமது சக்தி - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள்

08 ஏப்ரல் 2017

இந்த நாட்டின் எதிர்கால தலைவர்கள் பிள்ளைகளே என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள் குறிப்பிடுகிறார். சில அரசியல்வாதிகள்...

கௌரவ. அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் கொழும்பில் நிகழ்த்திய உரை

08 ஏப்ரல் 2017

இந்நாட்டின் பிள்ளைகளின் கல்வி மட்டத்தை மேம்படுத்துதல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் கடமையாகும். - தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்...

இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழும் அனைவரையும் ஒன்றிணைப்பதுதான் எனது கடமை - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்

09 ஏப்ரல் 2017

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில், அரசகரும மொழிகள் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும் சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும்...