mganeson

கௌரவ. மனோ கணேசன்
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர்

கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினாராவர். அவர் இலங்கையின் தலைநகரமான கொழும்பு பெருநகரம் அமைந்துள்ள கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கிறார்.

கௌரவ தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவராவார். அத்துடன் அவர் ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி மற்றும் தேசிய தொழிலாளர் சங்கம் ஆகிய கட்சிகளிளை உள்ளடக்கிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராவர். கௌரவ அமைச்சர் அவர்கள் ஜனநாயக தொழிலாளர் சங்கத்தின் தவிசாளர், இலங்கையர் அடையாளம் என்ற உப குழுவின் விசேட அமைச்சர் அத்துடன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தவிசாளர் ஆவர்.

எமது அமைச்சானது சகவாழ்வு, சமய சகிப்புத்தன்மை, சமயங்களுக்கிடையில் நம்பிக்கையை வளர்த்தல், மொழிசார் பிரச்சினைகள் மற்றும் சமகால மனித உரிமைகள் என்பவை தொடர்பாக செயற்பட்டு வருகிறது.

ஜனநாயக மக்கள் முன்னணி 2001ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டமையினால் இலங்கையின் இளைய தமிழ் அரசியல் கட்சியாகும். ஜனநாயக மக்கள் முன்னணியானது இலங்கையின் மேல் மாகாணத்தில் வாழும் 500,000 அதிகமான தமிழ் மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கும் கட்சியாகும். எவ்வாறாயினும் பிற்காலத்தில் (2006-2008) அதனது தொழிற்சங்கமான ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக பொருந்தோட்ட மக்களின் அரசியலிலும் காலடி வைத்தது.

ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் இலங்கையின் தேயிலை/இறப்பர் சார்ந்த பெருந்தோட்டத் தொழிற்துறையை மையமாக கொண்ட தொழிற்சங்கமாகும். இதன் உறுப்பினர்கள் அனைவரும் இந்திய வம்சாவழி பெருந்தோட்டத் தொழிலாளர்களாவர். ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் 1963ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டதுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து உருவாகிய முன்னணி பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கமாகும்.

சிவில் கண்காணிப்பு ஆணைக்குழுவானது Civil Monitoring Commission (CMC) இலங்கையில் இடம்பெறும் காணாமலாக்கப்படுதல், கடத்தல், நீதித் துறைக்கு புறம்பான கொலைகள், வன்பறிகள் அத்துடன் எதேட்சையதிகார கைது மற்றும் தடுத்துவைத்தல் என்பவை தொடர்பாக கண்காணிக்கும் மக்கள் சார்ந்த சுதந்திரமான மனித உரிமைகளை பிரச்சாரப்படுத்தும் இயக்கமாகும். சிவில் கண்காணிப்பு ஆணைக்குழுவானது 2006 செம்டம்பர் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் கௌரவ மனோ கணேசன் அவர்கள் அதன் அழைப்பாளர் என்ற வகையில் அதன் செயற்பாடுகளில் முக்கிய பங்கினை வகித்தார்.

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் 2007, டிசம்பரில் சுதந்தர பாதுகாவலன் விருதின் இரண்டாவது இடத்திற்கான விருதினை இவருக்கு வழங்கியது. கௌரவ அமைச்சர் தனது நடவடிக்கைகளை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளிலும் செய்யக்கூடியவராவார். அவரது கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் தலைமைத்தாங்கப்படும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.

அமைச்சரின் பணிக்குழு

பெயர் பதவி தொலைபேசி இல தொலைநகல்
திருமதி. பிரியானி குணரத்ன கௌரவ. அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் +94 112 883 715 +94 112 883 690
திரு. உதயகுமார் ஒருங்கிணைப்புச் செயலாளர் +94 112 883 693 +94 112 883 690
திரு. குகவரதன் ஒருங்கிணைப்புச் செயலாளர் +94 112 883 692 +94 112 883 690
திரு. சுராஜ் அல்விஸ் ஊடகச் செயலாளர்   +94 112 883 691
திரு. ராஜேந்திரன் பொது மக்கள் உறவு உத்தியோகத்தர் +94 112 883 716  

சமீபத்திய செய்திகள்

இந்த நாட்டில் பல்வேறு மொழிகளை பேசும் இனங்கள் 19 காணப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு மொழிகள் பேசுகின்றமை ரம்மியமானது. பல்வகைமைதான் எமது சக்தி - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள்

08 ஏப்ரல் 2017

இந்த நாட்டின் எதிர்கால தலைவர்கள் பிள்ளைகளே என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள் குறிப்பிடுகிறார். சில அரசியல்வாதிகள்...

கௌரவ. அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் கொழும்பில் நிகழ்த்திய உரை

08 ஏப்ரல் 2017

இந்நாட்டின் பிள்ளைகளின் கல்வி மட்டத்தை மேம்படுத்துதல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் கடமையாகும். - தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்...

இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழும் அனைவரையும் ஒன்றிணைப்பதுதான் எனது கடமை - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்

09 ஏப்ரல் 2017

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில், அரசகரும மொழிகள் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும் சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும்...