அமைச்சில் சிறந்த காரியாலய நிர்வாக சூழலை கொண்டு நடாத்தல், மனித மற்றும் பௌதீக வளங்களை முகாமை செய்தல், உத்தியோகத்தர்களது வேலை தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்தல், மற்றும் அமைச்சின் சேவைகளை அமுல்படுத்துவதற்கு உதவி புரிதல் போன்றன நிர்வாகப் பிரிவின் பிரதான நோக்கங்களாகும்.

நிர்வாகப் பிரிவின் முக்கிய பணிகள்

 • அமைச்சின் உள்ளக நிர்வாகம்
 • பதவி அனுமதி பெறல்
 • அமைச்சின் பணிப்பாணையின் கீழ் உள்ள நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு
 • ஆட்சேர்ப்பு திட்டங்களை உருவாக்கல்
 • நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு தொடர்பான நடவடிக்கைகள்
 • தனியார் கோவை நடாத்துகை
 • ஒழுக்காற்று நடவடிக்கைகள்
 • பயிற்சி நடவடிக்கைகள்
 • கட்டிடம், வாகனம் உள்ளடங்களாக அனைத்து பௌதீக வளங்களினதும் பராமரிப்பு
 • பாராளுமன்ற ஆலோசனை குழுவினை ஒருங்கிணைப்புச் செய்தல்
 • அமைச்சரவைப் பத்திரிகை தயாரித்தல்

சமூகங்களுக்கிடையில் ஒத்துழைப்பு மற்றும் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு தேவையான நிகழ்ச்சித்திட்டங்கள் அடையாளம் கண்டு, அறிமுகப்படுத்தி அமுல்படுத்துவதற்காக சமூகங்களுக்கிடையில் கலாசார, சமூக மற்றும் சமயப் பின்னணிகளை பரஸ்பரம் விளங்கிக் கொள்வதற்கு ஏற்ற வசதிகளை வழங்குதல் சகவாழ்வுப் பிரிவின் பணியாகும்.

அதற்காக இலங்கையில் வாழும் அனைத்து இனங்கள் மற்றும் இனக் குழுக்களின் மரபுகளை பாதுகாத்து அனைவரினதும் தனித்துவ அடையாளங்களை பாதுகாத்தல், பரஸ்பர நம்பிக்கை மற்றும் கௌரவத்தை கட்டியெழுப்புதல் இடம்பெறுகிறது.

நோக்கம்

"சகவாழ்வு மேம்பாட்டின் மூலம் அனைவருக்கும் சமமான சமூகத்தை கட்டியெழுப்புதல்."

பணிகள்

 • தேசிய சகவாழ்வு மேம்பாட்டு உதவியாளர்கள் ஊடாக குறித்த மாவட்ட மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளில் காணப்படும் சசகவாழ்வுடன் தொடர்புடைய பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதற்காக நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளல்.
 • சகவாழ்வுப் பிரிவுக்கான வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தை தயாரித்து அதில் உள்ள செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
 • மாவட்ட மட்டத்தில் சகவாழ்வு மேம்பாட்டிற்கு ஏற்புடைய தரப்புகள் ஊடாக நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல்.
 • தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர்கள் மற்றும் தேசிய சகவாழ்வு ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களுக்கு சகவாழ்வு தொடர்பிலான தேவையான ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டுதல்
 • சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட குழுக்களுக்கான வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் ஊடாக சகவாழ்வை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல்.
 • இனங்களுக்கிடையில் ஒத்துழைப்பு மற்றும் சகவாழ்வினை ஏற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல்.

நிதி சேவைகள் ஒருங்கிணைப்புச் செய்தல், ஏற்புடைய பிரிவுகளை ஒருங்கிணைப்பதனூடாக நிரூபிக்கத்தக்க நிதி தகவல்களை மற்றும் அமைச்சின் முகாமைத்துவ முறைமையை பராமரித்தல் என்ற பொறுப்புகளை நிதிப் பிரிவானது மேற்கொள்கிறது.

நிதிப் பிரிவின் பிரதான பணிகள்

 • பிரதம கணக்காளர் என்ற வகையில் அமைச்சின் செயலாளருக்கு அமைச்சின் நிதிக் கடப்பாடுகளை பூர்த்தி செய்யவும் பாராளுமன்றத்திற்கு வகைப்பொறுப்புக்கூறவும் உதவுதல்.
 • அரசாங்கத்தின் நிதிசார் விதிகள் மற்றும் ஒழுங்கு விதிகளுடன் இணங்கி செயற்படுதலை உறுதி செய்தல்.
 • நிதி முகாமைத்துவம் உட்பட சிறந்த நிதி கணக்கீட்டு முறைமையை தாபித்தலும் பராமரித்தலும்.
 • திறைசேரி, அமைச்சுக்கு கீழ்வரும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடனான கருத்திட்டங்களுடன் ஒருங்கிணைந்து நிதி அறிக்கைகள் மற்றும் வரவு செலவு தேவைகளை தயாரித்தல்/ இற்றைப்படுத்தல்/ மீள்பார்வை செய்தல் மற்றும் பூர்த்தி செய்தல்.
 • நிதி திட்டமிடல் மற்றும் வரவு செலவை தயாரித்தல்.
 • உரிய நேரத்திற்கு மற்றும் துல்லியமான நிதி அறிக்கையிடலை உறுதிப்படுத்தல்.
 • அமைச்சின் அனைத்து பௌதீக சொத்துக்களையும் வினைத்திறனான சொத்து முகாமை முறைமைகள் ஊடாக பாதுகாத்தல்.

திட்டமிடல் பிரிவானது, தேசிய கலந்துரையாடல்கள் பற்றிய அமைச்சின் பிரதான பிரிவுகளில் ஒன்றாகும்.

பெற்றுக் கொள்ளப்படும் பெறுபேறுகள், வினைத்திறன், விளைத்திறன் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக துறைசார் அடிப்படையில் அமுல்படுத்தப்படும் கருத்திட்டம்/ நிகழ்ச்சித்திட்டம் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு என்பன மேற்கொள்ளப்படும். மாதாந்த மற்றும் காலாண்டு முன்னேற்ற அறிக்கைகளை செயற்பாட்டுத் திட்டங்களுடன் மீளாய்வு செய்து, எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளில் இருந்து மாறுபாடுகள் இருக்கும் போது உயர் முகாமைத்துவத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

திட்டமிடல் பிரிவின் பிரதான பணிகளாவன,

 • கூட்டுத்திட்டம், செயற்பாட்டுத்திட்டங்கள், வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டுத் திணைக்களம் போன்ற நீண்டகால/ குறுங்கால திட்டங்களை தயாரிக்க அமைச்சின் பல்வேறு பிரிவுகளானது அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுடன் ஒருங்கிணைதல்.
 • அமைச்சினால் அடையாளம் காணப்பட்ட முன்னோக்கு கருத்திட்டங்கள் தொடர்பான செயற்பாடுகளுடன் ஒருங்கிணைத்தல்.
 • மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த அறிக்கைகளை தயாரித்தல் மற்றும் அதனை அமைச்சின் செயலாளர், தேசிய திட்டமிடல் திணைக்களம், தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களம், வெளிநாட்டு உதவி மற்றும் வரவு செலவு திட்ட மதிப்பீட்டு திணைக்களம் மற்றும் ஏனைய அக்கறைகொண்ட பிரிவினர்களுக்கு சமர்பித்தலும்.
 • முன்னேற்றம் மற்றும் செயற்பாட்டு திட்ட அறிக்கையை அமைத்து வரவு செலவு தொடர்பான கலந்துரையாடலில் பாராளுமன்றத்திற்கு முன்வைத்தல்.
 • அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை கண்காணித்தல் மற்றும் மதிப்பிடல்.
 • அமைச்சுசார் தரவுகளை பராமரித்தல், இற்றைப்படுத்தல் மற்றும் விருத்தி செய்தல்.
 • வருடாந்த செயற்பாட்டு அறிக்கையை ஒழுங்கமைத்து பாராளுமன்றத்திற்கும், நிதி அமைச்சுக்கும், கணக்காளர் நாயகத்திற்கும் சமர்ப்பித்தல்.

அமைச்சில் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் ஆகியவற்றின் அனைத்து தளத்திலும் மேற்கொள்ளப்படும் சேவைகள் மற்றும் பணிகளை மீளாய்தல், அளவிடுதல், மதிப்பிடுதல், மற்றும் உள்ளக நிர்வாக முறையில் விடய பங்களிப்பு தொடர்பாக அறிக்கை இடுவதன் மூலம் முகாமைத்துவத்திற்கு உதவுதல்.

உள்ளக கணக்காய்வு பிரிவின் முக்கிய பணிகள்

 • பிழைகள் மற்றும் மோசடிகள் தடுப்பதற்காக அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களில் அமுலாக்கப்படும் உள்ளக நிர்வாக முறைமையின் வெற்றிக்கான தன்மையை மதிப்பிடலும் உள்ளக நிர்வாகத்தை பலப்படுத்த உதவுதல்.
 • கணக்கிடுகை மற்றும் ஏனைய பதிவுகளின் நம்பகத்தன்மையையும் சரியான நிதிக் கூற்றுகளை தயாரிப்பதற்கு தேவையான தகவல்களை வழங்கும் கணக்கீட்டு முறைமைகள் பயன்படுத்தப்பட்டிருத்தலையும் உறுதி செய்தல்.
 • நிறுவனத்தின் பதவியணியினருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் அவர்களின் செயலாற்றுகையின் தரத்தை உறுதிப்படுத்தல்.
 • அமைச்சு மற்றும் அதன் கீழ் இருக்கின்ற நிறுவனங்களின் சொத்துக்களை எல்லா வகையான பாதிப்புகளில் இருந்தும் எவ்வளவு தூரம் பாதுகாக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தல்.
 • தாபனக் கோவை, நிதிக்கோவை, பொது நிர்வாகம், திறைச்சேரி மற்றும் வேறு சுற்றறிக்கை மற்றும் நெறிப்படுத்துகை கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தல்.
 • தேவையான சந்தர்ப்பங்களில் விசேட விசாரணைகளை நடாத்தல்.
 • கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ கூட்டங்களை நடாத்தல்.
 • வேலைகளின் முன்னேற்றம், திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் பற்றிய மதிப்பீடு செய்தலும் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களும் அட்டவணைகளும் இலக்கை நோக்கியதாக உள்ளதா என்பதை மதிப்பீடு செய்தல்.
 • காலத்துக்கு காலம் கணக்காய்வு முகாமைத்து திணைக்கத்தினால் வெளியிடப்படும் வழிகாட்டல்கள் மற்றும் வழிப்படுத்தல்களை பின்பற்றல், குறித்த ஆண்டின் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு முறை அமைச்சின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழு கூட்டத்தை நடாத்தல் மற்றும் அந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அமுல்படுத்தப்படும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த பின் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

அரசகரும மொழிகள் கொள்கையின் வினைத்திறனான அமுலாக்கம் அத்துடன் சகவாழ்வை மேம்படுத்தல் ஊடாக தேசிய சௌஜன்யத்தையும், அனைத்து பிரஜைகளுக்குமான சமவாய்ப்பையும் உறுதி செய்யப்படக்கூடிய சூழலை ஏற்படுத்துவதனை நோக்காக கொண்டே தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சானது தாபிக்கப்படலாயிற்று.

நோக்கங்கள்

 • அரசகரும மொழிகள் கொள்கை அமுலாக்கம் தொடர்பில் கொள்கை திட்டமிடல் மற்றும் கொள்கை உருவாக்கம்.
 • அரச சேவையின் இருமொழியாக்கம் தொடர்பாக தேவையான பின்னணிகளை கட்டியெழுப்புதல்.
 • அரசகரும மொழிகள் கொள்கை அமுலாக்கம் தொடர்பில் மக்களை வலுவூட்டல்.
 • மொழிப் பிரச்சாரம் மற்றும் மேம்பாடு தொடர்பில் இலங்கை மக்களிடத்தில் சாதகநிலையான மனப்பான்மையை ஏற்படுத்தல்.

பிரதான பணிகள்

 • அரச நிறுவனங்களில் மொழித் திட்டங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளுக்கு வசதியளித்தல்.
 • அரசகரும மொழிகள் கொள்கையை அமுல்படுத்தல் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தல்.
 • உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக சமூகத்துடன் கலந்துரையாடல் செயலமர்வினை நடாத்துதல்.
 • அமைச்சின் விடயப்பரப்பிற்கு உட்பட்ட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச தினங்களை அனுட்டித்தல் நிகழ்ச்சித்திட்டங்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கன.

சமீபத்திய செய்திகள்

இந்த நாட்டில் பல்வேறு மொழிகளை பேசும் இனங்கள் 19 காணப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு மொழிகள் பேசுகின்றமை ரம்மியமானது. பல்வகைமைதான் எமது சக்தி - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள்

08 ஏப்ரல் 2017

இந்த நாட்டின் எதிர்கால தலைவர்கள் பிள்ளைகளே என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள் குறிப்பிடுகிறார். சில அரசியல்வாதிகள்...

கௌரவ. அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் கொழும்பில் நிகழ்த்திய உரை

08 ஏப்ரல் 2017

இந்நாட்டின் பிள்ளைகளின் கல்வி மட்டத்தை மேம்படுத்துதல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் கடமையாகும். - தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்...

இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழும் அனைவரையும் ஒன்றிணைப்பதுதான் எனது கடமை - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்

09 ஏப்ரல் 2017

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில், அரசகரும மொழிகள் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும் சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும்...