இந்நாட்டின் பிள்ளைகளின் கல்வி மட்டத்தை மேம்படுத்துதல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் கடமையாகும். - தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் குறிப்பிடுகிறார்.

images/DSC_5291.JPGஇந்த நாட்டில் உள்ள பிள்ளைகளின் கல்வி மட்டத்தை அதிகரித்தல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் கடமை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிடுகிறார். அமைச்சராயினும் பாராளுமன்ற உறுப்பினராயினும் அவரின் முதற் கடமை அதுவென நான் கருதுகின்றேன். ஏனெனில் சிறுவர்களிடத்தில் நாம் எதிர்கால அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வைத்தியர்கள் உட்பட கணக்காளர்கள் இருக்கின்றார்கள். அதுதான் தாய் தந்தையர்களின் கனவாக உள்ளது. எனினும் நான் இந்த வேளையில் ஒன்றை குறிப்பிட விரும்புகின்றேன். அமைச்சர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களாக விரும்புபவர்கள் எப்போதும் களவு எடுக்க வேண்டாம் என்று. அவ்வாறு ஆசைப்படுபவர்கள் மனோ கணேசனை பேன்று இருங்கள் என்றுதான் நான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மற்றவர்கள் பற்றி எனக்கு சொல்லத்தெரியாது. எனவே, ஏழை பிள்ளைகள் உட்பட மத்திய தர வர்க்க குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கும் உதவுவதுதான் எனது குறிக்கோள். அதற்கு எங்கள் அமைச்சின் செயலாளர், முன்னால் நகர சபை உறுப்பினர் பிரியானி குணரத்ன உட்பட உத்தியோகத்தர்கள் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர். எனவே இந்த அப்பியாச புத்தகங்களை பெற்றுச் செல்லும் பிள்ளைகள் தங்களின் கல்வியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் எனது எதிர்பார்ப்பு. கொழும்பு 13, விவேகானந்தா மற்றும் சென் அன்டனி ஆண்கள் வித்தியாலங்களில் கற்கும் ஆயிரம் (1000) பிள்ளைகளுக்கு பாடசாலை அப்பியாசப் கொப்பிகளை வழங்கும் நிகழ்வில் பங்குபற்றிய போதே அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,...

DSC 5305எதிர்காலத்தில் நான் இன்னும் அதிக பாடசாலை உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுப்பேன். எனவே, நீங்கள் அனைவரும் இதனை கொண்டு சொன்று எனது நோக்கத்தை அடைய செய்தீர்கள் என்றால் மாத்திரமே எனக்கு புண்ணியம் கிடைக்கும். அதேபோல் இந்த சிறு பிள்ளைகள் பதினெட்டு வயதை அடைந்து வாக்கு போடும் காலமாகும் போது தேர்தலில் போட்டிப் போட நான் எதிர்பார்ப்பில்லை. அப்போது நான் அரசியலில் இருந்து விலகி விடுவேன். எனவே நான் எனக்கான வாக்காளர்களை உருவாக்கும் வேலையை செய்யவில்லை. பெற்றோர்கள் விரும்பினால் எனக்கு வாக்களிக்க முடியும். வாக்களிக்காமலும் இருக்க முடியும்.

பாராளுமன்றித்தில் உள்ள சிவப்பு மனிதர், தாடியுள்ளவர், அவர்கள் சொல்லி இருக்கின்றாராம் ஹம்பந்தொட்டை தொடர்பாக வழக்கிடுவதாக, நான் கேள்வியுற்றேன். நான் வாசுதேவ நாணயக்கார அவர்களுக்கு சொல்வது என்னவென்றால், தயவு செய்து வழக்கிடுங்கள். எங்களுக்கும் அதுதான் வேண்டும். அந்த கடலில் செல்லும் கப்பல்கள் ஒன்றிரண்டை நாம் மிகவும் கஸ்டப்பட்டு ஹம்பந்தொட்டைக்கு கொண்டு வந்தோம். அந்த காலத்தில் மாகம்புர துறைமுகத்தை அமைத்தார்கள். எனினும் கப்பல்கள் வரவில்லை. சரியாக விமானங்கள் இல்லாத விமான நிலையம் போன்று. எனினும் இவற்றை அழிவடைய செய்ய முடியாது. எனவே, இந்த திட்டம் 750 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்ட திட்டமாகும். அதாவது கிட்டத்தட்ட பதினொரு கோடி ரூபாய்கள். எனினும் முன்னர் இருந்த அரசாங்கம் 21 கோடி ரூபாய்களை கடனாக பெற்றுள்ளனர். எனவே, வாசுதேவ நாணயக்கார அவர்களே எனக்கு சொல்லுங்கள் பார்ப்போம் 21 கோடி ரூபாயில் 11 ஆயிரும் கோடியை கழித்தால் எவ்வளவு என்று. மிகுமி 10 கோடிக்கு என்ன நடந்தது?

DSC 5320பதினொரு கோடி ரூபாயில் எத்தனை பாடசாலை புத்தகங்கள் வாங்கி இருக்க முடியும்? எத்தனை பாடசாலைகள் கட்டியிருக்க முடியும்? அவ்வாறான நிதியை கொண்டு பாடசாலைகளில் மேலும் கட்டிடங்கள் அமைத்திருக்க முடியும், வைத்தியசாலைகளை உருவாக்க முடியும், பாதைகள் அமைக்க முடியும், தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை இந்த நேரத்தில் நான் கேட்க விரும்புகின்றேன். எனவே, பல கோடி ரூபாய்களை கொள்ளையடித்த குழுவுடன் வாசுதேவ நாணயக்காக  போன்றவர்கள் எமக்கு சொல்கின்றார்கள் வழக்கிடுவதாக. எனவே, முடியுமானால் வழக்கிடமாறு நான் கேட்கின்றேன். எமக்கு பிரச்சினை இல்லை. ஏனென்றால் நாங்கள் இப்போது பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தை சுயாதீன நிறுவனங்கள் ஆக்கியுள்ளோம். எனவே வழங்கிட முடியம். பிரச்சினை இல்லை. நாம் அச்சமடையப் போவதில்லை. எனவே, வாசுதேவ நாணயக்கா அவர்களுக்கும், அவருடைய குழுவுக்கும் எங்களுடன் விளையாட வேண்டாம் என்று சொல்ல விரும்புகின்றேன். இதுவொன்றும் பொறுப்பற்ற அரசாங்கம் அல்ல. அதிமேதகு. மைத்திரிபால சிரிசேன அவர்கள் உள்ள இந்த அரசாங்கம், ரணில் விக்கிரமசிங்க அவர்கள் உள்ள இந்த அரசாங்கம் மனோ கணேசன் உள்ள இந்த அரசாங்கம் பொறுப்பற்ற அரசாங்கம் அல்ல. பொறுப்பற்ற விளையாட்டு வேலைகள் செய்த காலம் முடிந்து விட்டது. நாம் வேலை செய்யும் அரசாங்கம். அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆகின்ற போது எங்கள் விளையாட்டுக்களை நீங்கள் பார்க்க முடியும். அது என்னவென்று இப்போது சொல்ல மாட்டேன். எனவே வழக்கிட்டு அல்லது சந்திகள் தோரும் நடந்து கோசமிட்டு எமக்கு எதிராக சுவரொட்களை ஒட்டி பல்வேறு வேலைகளை செய்வதால் நாம் அச்சமடையப் போவதில்லை. இந்த அரசாங்கம் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு அச்சமடைந்து இடையில் விட்டுவிட்டு போகும் அரசாங்கம் அல்ல. 2020 வரை நாம் ஆட்சியில் இருப்போம். அதற்கு பின்னரும் நாம் இருப்போம். அடுத்து வரும் இருபது வருடங்களுக்கு எம்மை அசைக்க முடியாது. அப்போது அவரின் தாடி மேலும் நரைத்து விடும். நாம் இந்த அரசாங்கத்தை விட்டு போக மாட்டோம்.

சமீபத்திய செய்திகள்

இந்த நாட்டில் பல்வேறு மொழிகளை பேசும் இனங்கள் 19 காணப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு மொழிகள் பேசுகின்றமை ரம்மியமானது. பல்வகைமைதான் எமது சக்தி - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள்

08 ஏப்ரல் 2017

இந்த நாட்டின் எதிர்கால தலைவர்கள் பிள்ளைகளே என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள் குறிப்பிடுகிறார். சில அரசியல்வாதிகள்...

கௌரவ. அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் கொழும்பில் நிகழ்த்திய உரை

08 ஏப்ரல் 2017

இந்நாட்டின் பிள்ளைகளின் கல்வி மட்டத்தை மேம்படுத்துதல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் கடமையாகும். - தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்...

இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழும் அனைவரையும் ஒன்றிணைப்பதுதான் எனது கடமை - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்

09 ஏப்ரல் 2017

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில், அரசகரும மொழிகள் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும் சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும்...