இந்நாட்டின் பிள்ளைகளின் கல்வி மட்டத்தை மேம்படுத்துதல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் கடமையாகும். - தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் குறிப்பிடுகிறார்.

images/DSC_5291.JPGஇந்த நாட்டில் உள்ள பிள்ளைகளின் கல்வி மட்டத்தை அதிகரித்தல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் கடமை என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிடுகிறார். அமைச்சராயினும் பாராளுமன்ற உறுப்பினராயினும் அவரின் முதற் கடமை அதுவென நான் கருதுகின்றேன். ஏனெனில் சிறுவர்களிடத்தில் நாம் எதிர்கால அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வைத்தியர்கள் உட்பட கணக்காளர்கள் இருக்கின்றார்கள். அதுதான் தாய் தந்தையர்களின் கனவாக உள்ளது. எனினும் நான் இந்த வேளையில் ஒன்றை குறிப்பிட விரும்புகின்றேன். அமைச்சர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களாக விரும்புபவர்கள் எப்போதும் களவு எடுக்க வேண்டாம் என்று. அவ்வாறு ஆசைப்படுபவர்கள் மனோ கணேசனை பேன்று இருங்கள் என்றுதான் நான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மற்றவர்கள் பற்றி எனக்கு சொல்லத்தெரியாது. எனவே, ஏழை பிள்ளைகள் உட்பட மத்திய தர வர்க்க குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுக்கும் உதவுவதுதான் எனது குறிக்கோள். அதற்கு எங்கள் அமைச்சின் செயலாளர், முன்னால் நகர சபை உறுப்பினர் பிரியானி குணரத்ன உட்பட உத்தியோகத்தர்கள் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர். எனவே இந்த அப்பியாச புத்தகங்களை பெற்றுச் செல்லும் பிள்ளைகள் தங்களின் கல்வியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் எனது எதிர்பார்ப்பு. கொழும்பு 13, விவேகானந்தா மற்றும் சென் அன்டனி ஆண்கள் வித்தியாலங்களில் கற்கும் ஆயிரம் (1000) பிள்ளைகளுக்கு பாடசாலை அப்பியாசப் கொப்பிகளை வழங்கும் நிகழ்வில் பங்குபற்றிய போதே அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகள்

இந்த நாட்டில் பல்வேறு மொழிகளை பேசும் இனங்கள் 19 காணப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு மொழிகள் பேசுகின்றமை ரம்மியமானது. பல்வகைமைதான் எமது சக்தி - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள்

08 ஏப்ரல் 2017

இந்த நாட்டின் எதிர்கால தலைவர்கள் பிள்ளைகளே என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன் அவர்கள் குறிப்பிடுகிறார். சில அரசியல்வாதிகள்...

கௌரவ. அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் கொழும்பில் நிகழ்த்திய உரை

08 ஏப்ரல் 2017

இந்நாட்டின் பிள்ளைகளின் கல்வி மட்டத்தை மேம்படுத்துதல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் கடமையாகும். - தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்...

இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழும் அனைவரையும் ஒன்றிணைப்பதுதான் எனது கடமை - தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ. மனோ கணேசன்

09 ஏப்ரல் 2017

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில், அரசகரும மொழிகள் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும் சகவாழ்வு மற்றும் கலந்துரையாடல் என்ற விடயப்பரப்பு தொடர்பாகவும்...